ரூ.1.60 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது பஜாஜ் டோமினர் 250

இறுதியாக பஜாஜ் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோமினர் 250 மாடலை ரூ.1.60 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் முன்பதிவு அனைத்து ஷோரூம்களிலும் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த மாடல் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பஜாஜ் டோமினர் 250 மாடலின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியே டோமினர் 400 மாடலின் வடிவமைப்பு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. LED  முகப்பு விளக்குகள், LCD  இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் ABS என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 180  கிலோ கிராம் எடை கொண்டது. இந்த மாடல் 157  மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. மேலும், இந்த மாடலில் 13  லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

இந்த மாடலில் 248.77 CC கொள்ளளவு கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Ps @ 8500rpm திறனையும் 23.5 Nm @ 6500rpm இழுவை திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சுசூகி ஜிக்ஸர் 250,  யமஹா FZ25, ஹஸ்க்வர்னா விட்பிலென் 250 மற்றும் ஸ்வார்ட்பிலென் 250 போண்டா மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.