ட்ரியம்ப் போன்வில்லே T100 மற்றும் T120 மாடல்களின் பிளாக் எடிசன் மாடல் வெளியிடப்பட்டது
ட்ரியம்ப் நிறுவனம் இந்தியாவில் போன்வில்லே T100 மற்றும் T120 மாடல்களின் பிளாக் எடிசன் மாடல்களை வெளியிட்டுள்ளது. போன்வில்லே T100 மற்றும் T120 பிளாக் எடிசன் மாடல்கள் முறையே ரூ 8,87,400 மற்றும் ரூ 9,97,600 ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சாதாரண மாடலுக்கு இந்த பிளாக் எடிசன் மாடலுக்கும் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய மாடல்களின் வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அனைத்து குரோம் பாகங்களும் கருப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். போன்வில்லே T100 மாடல் கருப்பு மற்றும் மேட் கருப்பு வண்ணங்களிலும், போன்வில்லே T120 மாடல் கருப்பு மற்றும் மேட் கிரே வண்ணங்களிலும் கிடைக்கும்.
போன்வில்லே T100 மாடலில் அதே 900cc கொள்ளளவு கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 55Bhp திறனையும் 80 Nm இழுவைதிறனையும் வழங்கும். அதேபோல், T120 மாடலில் 1200cc கொள்ளளவு கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 80Bhp திறனையும் 105 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல்களில், ABS, என்ஜின் இம்மொபிளைசர், டிராக்சன் கண்ட்ரோல், DRL முகப்பு விளக்கு, சார்ஜிங் போர்ட் மற்றும் பல அடுத்த தலைமுறைக்கு ஏற்ற உபகரணங்கள் இந்த மாடலில் நிறைய பொருத்தப்பட்டுள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.