வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டு ஹோண்டா சிட்டி
இறுதியாக ஹோன்டா நிறுவனம் புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தாய்லாந்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதே வடிவமைப்பை தான் பெற்றுள்ளது. இந்த மாடலின் உட்புறம் வெளிப்புறம் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஐந்தாம் தலைமுறை ஹோன்டா சிட்டி மாடலில் சிவிக், அக்கார்ட் மற்றும் அமேஸ் மாடல்களின் வடிவமைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் அமேஸ் மாடல் போல பாக்சி வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பெரிய முகப்பு கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற LED விளக்குகள் என ஏராளமான புதிய டிசைன் ஏலெமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய மாடலை விட அதிக நீளம் மற்றும் அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் உட்புறமும் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் உட்புறத்தில் புதிய கனக்ட் கார் வசதியுடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஆறு காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலின் எஞ்சினில் ஏதும் பெரிய மாற்றங்கள் இருக்காது, அதே முந்தய 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினிலேயே தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ரூ 10 லட்சம் முதல் ரூ 16 லட்சம் விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.