ரூ 9.8 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2020 ஆம் ஆண்டு புதிய தலைமுறை மஹிந்திரா தார்

மஹிந்திரா நிறுவனம் 2020 ஆம் ஆண்டு புதிய தலைமுறை தார் மாடலை ரூ 9.8 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறை தார் மாடல் வெறும் ஆப் ரோடு பயன்பாட்டிற்கான மாடலாக மட்டும் இல்லாமல் குடும்ப பயன்பாட்டிற்கு எதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலை விட அதிக வசதிகள் மற்றும் பாதுகாப்பு கொண்டதாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹார்ட் டாப் மற்றும் சாப்ட் டாப் தேர்வுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் AX, AX(O) மற்றும் LX என மூன்று வேரியன்ட்டுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக விலை விவரம்:
பெட்ரோல்:

  • AX MT six-seat soft-top: Rs  9.80 lakh
  • AX MT six-seat soft-top: Rs 10.65 lakh
  • AX (O) MT four-seat convertible-top: Rs 11.90 lakh
  • LX MT four-seat hard-top: Rs 12.49 lakh
  • LX AT four-seat convertible-top:: Rs 13.45 lakh
  • LX AT four-seat hard-top: Rs 13.55 lakh

டீசல்: 

  • AX MT six-seat soft-top: Rs 10.85 lakh
  • AX (O) MT four-seat convertible-top: Rs 12.10 lakh 
  • AX (O) MT four-seat hard-top: Rs 12.20 lakh
  • LX MT four-seat convertible-top: Rs 12.85 lakh
  • LX MT four-seat hard-top: Rs 12.95 lakh
  • LX AT four-seat convertible-top: Rs 13.65 lakh
  • LX AT four-seat hard-top: Rs 13.75 lakh
     

இதன் உட்புறம் முன்பை விட அதிக சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் நோக்கிய இரண்டாவது வரிசை இருக்கைகள், பவர் விண்டோ, அதிக வசதிகள் கொண்ட ஸ்டேரிங் வீல் என ஏராளமான புதிய வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் எவ்வளவு மாற்றங்கள் செய்தாலும் பழைய வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் அதிக அளவில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

புதிய தலைமுறை தார் மாடல் 2.2 லிட்டர் mHAWK டீசல் மற்றும் 2.0 லிட்டர் mSTALLION பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் 2.2 லிட்டர் mHAWK டீசல் எஞ்சின் 130 bhp திறனையும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் 2.0 லிட்டர் mSTALLION பெட்ரோல் எஞ்சின் 150 bhp திறனையும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினும் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும் மேலும் 4x4 சிஸ்டமும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.