வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா மாடலின் விலை விவரம்
ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டு வெர்னா மாடலின் விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ‘Sensuous Sportiness’ எனும் டிசைன் வடிவமைப்பில் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ரூ 9.3 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
வேரியன்ட் வாரியாக மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா மாடலின் விலை விவரம்:
Hyundai Verna 1.5 l MPi Petrol:
- S MT - Rs 930,585
- SX MT - Rs 1,070,389
- SX IVT - Rs 1,195,389
- SX(O) MT - Rs 1,259,900
- SX(O) IVT - Rs 1,384,900
Hyundai Verna 1.0 Turbo GDi Petrol:
- SX(O) DCT - Rs 1,399,000
Hyundai Verna 1.5 CRDi Diesel:
- S+ MT - Rs 1,065,585
- SX MT - Rs 1,205,389
- SX AT - Rs 1,320,389
- SX(O) MT - Rs 1,394,900
- SX(O) AT - Rs 1,509,900
இந்த மாடல் ஹூண்டாய் க்ரெடா மற்றும் வென்யூ மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களிலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் 7 ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்விலும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் Intelligent Variable Transmission தேர்விலும் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும்.
CAPACITY (CC) |
MAXIMUM POWER (PS/RPM) |
MAXIMUM TORQUE (Nm/RPM) |
TRANSMISSION | |
1.5 l MPi Petrol (BS6) |
1497 | 115 / 6300 | 144 / 4500 | 6MT & IVT |
1.5 l U2 Diesel (BS6) |
1493 | 115 / 4000 | 250 / 1500-2750 | 6MT & 6AT |
1.0 l Kappa Turbo-GDi Petrol (BS6) |
998 | 120 / 6000 | 172 / 1500-4000 | 7DCT |
இந்த மாடல் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 10.67 cm கலர் TFT ஸ்க்ரீன் கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் இருக்கை, வயர்லெஸ் போன் சார்ஜர், ஸ்மார்ட் ட்ரங்க் ஓபன் என ஏராளமான புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.