சோனெட் காம்பேக்ட் SUV மாடலின் வரைபடங்களை வெளியிட்டது கியா
கியா நிறுவனம் சோனெட் காம்பேக்ட் SUV மாடலின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளிப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் கான்செப்ட் மாடல் முதலில் 2020 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் வெளிப்புற வடிவமைப்பு பெரும்பாலும் இதன் கான்செப்ட் மாடலையே போலவே உள்ளது. மேலும் இதன் உட்புற வடிவமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இன்போடைன்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வடிவமைப்பு கியா செல்டோஸ் மாடல் போலவே உள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் வென்யூ மாடலில் வழங்கப்படும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4-லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சோனெட் மாடல் ரூ 7 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரையிலான விலையில் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசூகி விட்டாரா ப்ரீசா, டாடா நெக்ஸன் மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் SUV மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.