புத்தம் புதிய 4-மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் SUV மாடலின் டீசரை வெளியிட்டது நிசான்
நிசான் நிறுவனம் புதிய 4-மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் SUV மாடலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே, தற்போது அந்த புதிய மாடலின் டீசர் படத்தை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஜூலை 16 ஆம் தேதி வெளிப்படுத்தப்படும் எனவும், இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் நிசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மாடல் மேக்நைட் எனும் பெயரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வெளியிடப்படும், டீசல் எஞ்சின் தேர்வில் வெளிப்படாது என்றே தெரிகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய 4-மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் SUV மாடல் மாருதி சுசூகி விட்டாராப் ரீசா, டாடா நெக்ஸன், மஹிந்திரா XUV300 மற்றும் போர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.