ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலின் விலை மற்றும் இதர விவரம்

புதிய மேம்படுத்தப்பட்ட ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது.  இந்த மாடல் தாய்லாந்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதே வடிவமைப்பை தான் பெற்றுள்ளது. இந்த மாடலின் உட்புறம் வெளிப்புறம் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக விலை விவரம்:
பெட்ரோல்:

  • V MT - Rs 10.90 lakh
  • VX MT - Rs 12.26 lakh
  • V CVT - Rs 12.20 lakh
  • ZX MT - Rs 13.15 lakh
  • VX CVT - Rs 13.56 lakh
  • ZX CVT - Rs 14.45 lakh

டீசல்:

  • V MT - Rs 12.40 lakh
  • VX MT - Rs 13.76 lakh
  • ZX MT - Rs 14.65 lakh
     

புதிய ஐந்தாம் தலைமுறை ஹோன்டா சிட்டி மாடலில் சிவிக், அக்கார்ட் மற்றும் அமேஸ் மாடல்களின் வடிவமைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் அமேஸ் மாடல் போல பாக்சி வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பெரிய முகப்பு கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற LED விளக்குகள் என ஏராளமான புதிய டிசைன் ஏலெமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய மாடலை விட அதிக நீளம் மற்றும் அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் உட்புறமும் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் உட்புறத்தில் புதிய கனக்ட் கார் வசதியுடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஆறு காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின் 100 ps திறனையும் 200 Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் பெட்ரோல் எஞ்சின் 121 ps திறனையும் 145 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களிலும் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் மாடலில் கூடுதலாக ஏழு ஸ்பீட் CVT டிரான்ஸ்மிஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மாருதி சுசூகி சியாஸ், ஸ்கோடா ரேபிட், வோல்க்ஸ் வேகன் வெண்டோ, ஹூண்டாய் வெர்னா மற்றும் டொயோடா யாரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.