இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய ஸ்கோடா ரேபிட், சூப்பர்ப் மற்றும் கரோக் மாடல்கள்
ஸ்கோடா நிறுவனம் ரேபிட், சூப்பர்ப் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கரோக் SUV மாடல்களை முறையே ரூ 7.49 லட்சம், ரூ 29.99 லட்சம் மற்றும் ரூ 24.99 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களுமே பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கோடா ரேபிட்:
ஸ்கோடா ரேபிட் மாடலின் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இல்லை, புதிய 1.0 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 110PS திறனையும் மற்றும் 175Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
- RIDER MT - Rs 7,49,000
- AMBITION MT - Rs 9,99,000
- ONYX MT - Rs 10,19,000
- STYLE MT - Rs 11,49,000
- MONTE CARLO MT - Rs 11,79,000
ஸ்கோடா சூப்பர்ப்:
மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்கோடா சூப்பர்ப் மாடலின் வடிவமைப்பில் சில மாற்றங்களும் கூடுதல் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 190PS திறனையும் மற்றும் 320Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
- SPORTLINE AT - Rs 29,99,000
- L&K AT - Rs 32,99,000
ஸ்கோடா கரோக் SUV :
ஸ்கோடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கரோக் SUV மாடலை ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டும் ரூ 24.99 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 150PS திறனையும் மற்றும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாடல்களிலுமே ஏராளமான வசதிகள் மற்றும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சூப்பர்ப் மற்றும் கரோக் SUV மாடல்களில் வசதிகள் மற்றும் உபகரணங்களை பஞ்சமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.