ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிப்படுத்தப்படும் 2020 ஆம் ஆண்டு அடுத்த தலைமுறை மஹிந்திரா தார்
மஹிந்திரா நிறுவனம் அடுத்த தலைமுறை தார் மாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் சோதனை ஓட்ட படங்கள் ஏற்கனவே நிறைய முறை இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் ஏற்கனவே வெளியிடப்பட வேண்டியது, கொரோனா பிரச்னை காரணமாக இந்த தற்போது வெளியிடப்படுகிறது.
அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் மாடல் முந்தய மாடலை விட உருவத்தில் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தலைமுறை மாடல் ஹார்ட் டாப் உடனும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உட்புறம் முன்பை விட அதிக சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் நோக்கிய இரண்டாவது வரிசை இருக்கைகள், பவர் விண்டோ, அதிக வசதிகள் கொண்ட ஸ்டேரிங் வீல் என ஏராளமான புதிய வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் எவ்வளவு மாற்றங்கள் செய்தாலும் பழைய வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் அதிக அளவில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் மாடல் புதிய BS6 2.0 லிட்டர் டீசல் எஞ்சினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எஞ்சின் 140bhp திறன் கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 சிஸ்டம் ஆகியவையும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The all-new Thar will be unveiled on 15th August, 2020 through a live webcast on the official Mahindra Thar website (https://auto.mahindra.com/suv/thar) and its social media handles.
Website/Social Media Handles:
- Website - https://auto.mahindra.com/suv/thar
- Facebook: www.facebook.com/mahindrathar
- Twitter: www.twitter.com/mahindra_thar
- Instagram: www.instagram.com/mahindrathar
- Youtube: www.youtube.com/tharmahindra
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.