இந்தியர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் 5 சிறந்த பாதுகாப்பான கார்கள்

குளோபல் NCAP அமைப்பு 'பாதுகாப்பான கார்கள் இந்தியாவிற்கு' #SaferCarsForIndia என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்திய கார்களை அடிக்கடி சோதனை செய்து முடிவுகளை வெளியிடும். அதனடிப்படையில், இந்தியர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் 5 சிறந்த பாதுகாப்பான கார்கள் எவை என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

முந்தய காலங்களை விட தற்போது விபத்து நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், நாம் கார் வாங்கும்போது அதன் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்வது சிறந்தது. ஒரு காரின் பாதுகாப்பு என்பது காரில் உள்ள காற்றுப்பை மற்றும் ABS என பாதுகாப்பு வசதிகளின் எண்ணிக்கையை பொறுத்து மட்டுமே அமையாது, அதன் கட்டமைப்பும் விபத்து நடக்கும் போது பாதுகாப்பில் பெரிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 

1. மஹிந்திரா XUV300

மஹிந்திரா XUV300 மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டையும், சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற முதல் இந்திய கார் மஹிந்திரா XUV300 என்பது குறிப்பிடத்தக்கது.

2. டாடா அல்ட்ராஸ்

டாடா அல்ட்ராஸ் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டையும், சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. 

3. டாடா நெக்ஸன்

டாடா நெக்ஸன் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டையும், சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. குளோபல் சிதைவு சோதனையில் முதல் முறையாக 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார், நெக்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மஹிந்திரா மராஸோ

மஹிந்திரா மராஸோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

5. டாடா டியாகோ மற்றும் டிகோர்

டாடா டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு மாடல்களும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.