ரூ 19.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய வோல்க்ஸ்வேகன் T-ராக் SUV
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் T-ராக் SUV மாடலை ரூ 19.99 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை போலவே ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் டிகுவான் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் CBU மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
இந்த மாடலில் டைகுன் மற்றும் டிகுவான் மாடல்களின் வடிவைப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பெரிய அறுங்கோண முகப்பு கிரில், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், அடிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டு ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருமளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4342 மில்லி மீட்டர் நீளமும், 1819 மில்லி மீட்டர் அகலமும், 1573 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2590 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது.
இந்த மாடலின் உட்புறம் மிகச்சிறப்பான வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 12.3-inch காக்பிட் சிஸ்டம், 8-inch டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன் ரூப், தோல் இருக்கை, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆறு காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் BS6 மாசுக்கட்டுப்பாடு கொண்ட 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் TSI பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 148Bhp திறனையும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.