டொயோடா C-HR
டொயோடா நிறுவனம் C-HR காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடலின் உட்புற தோற்றம் கொண்ட படங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன் கான்செப்ட் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தயாரிப்பு நிலை மாடல் 2016 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதி என அணைத்து பக்கமும் கரடுமுரடான தோற்றத்தை தரும் வகையில் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மற்றும் பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புற தோற்றம் போலவே உட்புறமும் சிறப்பாக ஊதா மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டேரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சின் தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை. எனினும் இந்த மாடல் 1.8 லிட்டர் ஹைபிரிட் எஞ்சினுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் உலகளவில் இந்த வருட இறுதியில் வெளியிடப்படும். ஆனால் இந்திய வெளியீடு பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.