குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மஹிந்திரா மராஸோ
மஹிந்திரா மராஸோ மாடல் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை படைத்துள்ளது. குளோபல் NCAP அமைப்பு 'பாதுகாப்பான கார்கள் இந்தியாவிற்கு' என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்திய கார்களை அடிக்கடி சொத்தை நடத்தும், அதன்படி மஹிந்திரா மராஸோ மற்றும் டாடா நெக்ஸன் மாடல்களின் சோதனை முடிவுகளை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா மராஸோ மாடல் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெரும் நான்காவது இந்திய கார் மற்றும் முதல் இந்திய MPV மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா மராஸோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. டாடா மற்றும் மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்கள் சிறப்பான கட்டுமான தரத்துடன் கார்களை சமீப காலமாக வடிவமைத்து வருகிறது. இனி வரும் காலங்களில் அணைத்து கார் நிறுவனங்களும் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டினால் சிறப்பாக இருக்கும். நவம்பர் 16 ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும் மஹிந்திரா மராஸோ மாடல்கள் தான் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.