ரூ 6.09 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது நிசான் மைக்ரா பேஷன் எடிசன்
டாடா நிறுவனத்தை தொடர்ந்து நிசான் நிறுவனமும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மைக்ரா பேஷன் எடிசன் சிறப்பு பதிப்பு மாடலை ரூ 6.09 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மைக்ரா மாடலின் XL CVT வேரியன்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.
இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பாடி கிராபிக்ஸ், கருப்பு நிற வீல் கவர் மற்றும் ஆரஞ்சு நிற ஒப்பனைகளுடன் கூடிய பக்கவாட்டு கண்ணாடி ஆகியவையும் உட்புறத்தில் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண ஒப்பனைகளும் மற்றும் புதிய 6.2 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த என்ஜின் 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் CVT ட்ரான்ஸ்மிஷனில் மட்டும் தான் கிடைக்கும். இந்த மாடல் 19.34 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.