வெளிப்படுத்தப்பட்டது புத்தம் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R
ஹீரோ நிறுவனம் புத்தம் புதிய எக்ஸ்ட்ரீம் 160R மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் 150 மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R மாடல் எக்ஸ்ட்ரீம் 200R மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் மாடல்களின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், எஞ்சின் சைட் ஸ்டாண்ட் கட் ஆப் சுவிட்ச், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் BS6 மாசுக்கட்டுப்பாடு கொண்ட 163cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15 Bhp @8000rpm திறனையும் 14 Nm @6500rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. இந்த மாடலின் இரண்டு வீலிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலில் சிங்கிள் சேனல் ABS சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் யமஹா FZ-FI V3.0, பஜாஜ் பல்சர் NS160, ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் சுசூகி ஜிக்ஸர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.