ரூ 38 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது இந்தியன் சீஃப்டைன் எலைட்
அமெரிக்காவை சேர்ந்த சொருகு பைக் நிறுவனமான இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் சீஃப்டைன் எலைட் மாடலை ரூ 38 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வெறும் 350 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உலகம் முழுவதும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த மாடல் CBU (completely-built-up) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாடல் முழுவதும் கையால் சில்வர் வண்ண பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாடலை பெயிண்ட் செய்ய 25 மணி நேரம் ஆகுமாம். இந்த மாடலில் புதிய அலாய் வீல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பவர் வின்ட் ஷீல்ட், ABS, ஆடியோ சிஸ்டம், லெதர் சீட் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே தண்டர் ஸ்ட்ரோக் 111 V- ட்வின் எஞ்சின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 1811cc கொள்ளளவு கொண்டது. இது அதிகபட்சமாக 161.6 Nm இழுவைதிறனை வழங்கும். இதன் முன்புறத்தில் 300mm ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 300mm சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.