ரூ 89,900 விலையில் வெளியிடப்பட்டது புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R
மிக நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 200R மாடலை ரூ 89,900 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மட்டும் ஏற்கனவே விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் மாடலின் அடிப்படையில் 200 cc என்ஜின் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இந்த மாடலில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்குகள், புதிய மற்றும் பெரிய கிராபிக்ஸ் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 199.6cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18.4 Bhp @8000rpm திறனையும் 17.1 Nm @6500rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் கடந்து விடும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 112kmph வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் 39.9kmpl மைலேஜ் தரும் எனவும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சிங்கிள் சேனல் ABS பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் KTM டியூக் 200, பஜாஜ் பல்சர் NS 200 மற்றும் அப்பாச்சி RTR 200 4V போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.