ரூ 7.3 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா CBR650F
ஹோண்டா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட CBR650F மாடலை ரூ 7.3 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. முந்தய மாடலுக்கும் இந்த மாடலுக்கும் எந்த விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், புதிய சஸ்பென்ஷன் அமைப்பும் புதிய BSIV எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் BSIV மாசுக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதால் BSIII எஞ்சின் கொண்ட CBR650F மாடலை சில மாதங்களுக்கு முன்பு விற்பனையில் இருந்து நிறுத்தியது. தற்போது BSIV எஞ்சினுடன் சில மேம்பாடுகளை செய்து இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் புதிய BSIV மாசுக்கட்டுப்பாடு கொண்ட 648.72cc கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 86.7bhp திறனும் 60.5Nm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் முறையே 320mm மற்றும் 240mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS நிரந்தர அம்சமாக கிடைக்கும். இந்த மாடல் கவாஸாகி நிஞ்ஜா 650 போன்ற மாடலுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணத்தில் கிடைக்கும்.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.