">

முதல் பெண் பைக் ரேசரை தனது குழுவில் சேர்த்துள்ளது TVS ரேசிங்

டிவிஎஸ் நிறுவனம் தனது ரேசிங் குழுவில் முதல் பெண் பைக் ரேசரான ஸ்ரேயா சுந்தர் ஐயர் அவர்களை சேர்த்துள்ளது. இந்த வருடன் இந்தியாவில் நடைபெறும் தேசிய ரேலி சேம்பியன்ஷிப் போட்டியில் TVS  ரேசிங் நிருவனதிற்காக  கலந்துகொள்வார். ஸ்ரேயா சுந்தர் ஐயர் தான் இந்தியாவில் ஒரு ரேசிங் குழுவில் இணையும் முதல் பெண் ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

24 வயதான ஸ்ரேயா தனது 17 ஆம் வயதிலிருந்து ரேஸ் பைக்குகளை ஒட்டி வருகிறார். மேலும் பல போட்டிகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். இது குறித்து ஸ்ரேயா ஐயர் கூறும் போது, "நான் TVS  ரேசிங் நிறுவனத்தில் இணைவது குறித்து பெருமைப்படுகிறேன். TVS  ரேசிங் நிறுவனம் மிகச்சிறந்த பயிற்சியாளர்களையும் வாகனங்களையும் கொண்ட சிறந்த நிறுவனம். அந்நிறுவனத்தில் பணிபுரிவது எனக்கு மிகுந்த பயனை தரும். நான் இளைய தலைமுறை பைக் ரேசர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பேன்" என்று கூறினார். 

TVS நிறுவனம் ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு பைக் ரேஸ் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.