இந்தியாவில் வெளியிடப்பட்டது ஹஸ்க்வர்னா விட்பிலென் 250 மற்றும் ஸ்வார்ட்பிலென் 250
பஜாஜ் நிறுவனம் இறுதியாக ஹஸ்க்வர்னா விட்பிலென் 250 மற்றும் ஸ்வார்ட்பிலென் 250 மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களும் ரூ 1.8 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. KTM ஷோரூம்களிலேயே இந்த மாடலும் கிடைக்கும். மேலும் ஹஸ்க்வர்னா நிறுவனம் KTM நிறுவனத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிறுவனங்களையும் பஜாஜ் நிறுவனம் தான் இந்தியாவில் நிர்வகித்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.
ஹஸ்க்வர்னா விட்பிலென் 250 மற்றும் ஸ்வார்ட்பிலென் 250 மாடல்களில் KTM டியூக் 250 மாடலில் உள்ள எஞ்சின், பிரேம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. விட்பிலென் 250 மாடல் கேப் ரேசர் வடிவமைப்பிலும் ஸ்வார்ட்பிலென் 250 மாடல் ஸ்க்ராம்ப்லர் வடிவமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடலுமே KTM டியூக் 250 மாடலை விட பிரீமியம் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் விலை சற்று குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல்களில் டியூக் 250 மாடலில் உள்ள அதே 248.8CC கொள்ளளவு கொண்ட எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 31BHP திறனும் 24NM டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல்களில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டியூவல் சேனல் ABS உடன் கூடிய டிஸ்க் பிரேக் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.