மகிந்திரா - ஜென்சே

மகிந்திரா நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது.  இந்த ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலில் அமெரிக்காவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த ஸ்கூட்டர் ஒருவர் மட்டுமே அமரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் பொருள்கள் வைக்கும் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.5 Kw கொண்ட லிதியம் ஐயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.
 
மேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.