TVS ஸிப்பெலின்
TVS நிறுவனம் ஸிப்பெலின் குரூஸர் கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இது TVS நிறுவனத்தின் முதல் குரூஸர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. TVS நிறுவனம் யாரும் எதிர்பாராத விதமாக இந்த மாடலை வெளிப்படுத்தியுள்ளது.
ஸிப்பெலின் குரூஸர் கான்செப்ட் மாடல் டுகாட்டி டியாவெல் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தங்க நிற போர்க், LED முகப்பு விளக்குகள், குரூஸர் போன்ற பக்கவாட்டு கண்ணாடி என சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ABS பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவலை தூண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, அந்த அளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸிப்பெலின் குரூஸர் கான்செப்ட் மாடலில் 220cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஒரு மின் மோட்டோரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு மைல்டு ஹைபிரிட் குரூஸர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மக்களின் எதிர்பார்ப்பை பொறுத்து ரூ 1 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் வெளியிடப்பட்டால் பஜாஜ் அவெஞ்சர் மற்றும் சுசூகி இண்ட்ரூடர் 150 போன்ற குரூஸர் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.